Friday, February 20, 2015

புளிச்சாக்குளம் உடப்பு பகுதி வீடுகளுக்கு தொடராக திருடர்கள் புகுவதால் மக்கள் அச்சம்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம் மற்றும் உடப்பு ஆகிய கிராமங்களில் இரவு வேளைகளில் திருடர்கள் வீடுகளுக்குள் புகுந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்திருப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இவ்வாறு வீடுகளுக்குள் திருடர்ள் புகுந்து வருவதாகவும் அவ்வாறு வரும் திருடர்களைப் பிடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் புளிச்சாக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து கிராம மக்களுடன் கூட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். கிராம அதிகாரி, பள்ள பரிபாலன சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்துள்ளனர். இதன் போது இளைஞர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்களை இரவு வேளையில் முக்கிய சந்திகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கும், பொலிஸ் ரோந்து நடவடிக்கையை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டதாக புளிச்சாக்குளம் கிராம அதிகாரி தெரிவித்தார்.


Disqus Comments