Friday, February 20, 2015

பௌத்த தேரரின் இறுதிக் கிரியையில் அதிகளவில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்.

வண்ணாத்திவில்லு ஆறாம் கட்டைப் பிரதேச பௌத்த விகாரையில் வசித்து வந்த  புத்தளம் குருநாகல் வீதி, மதுரகம அஷோகாராம விகாரையின் பிரதம விகாராதிபதியாகவும் பல பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றி காலமான மூத்த தேரர் தெல்வகுரே விபக்ஸி தேரரின் இறுதிக்கிரியைகள் நேற்று  மாலை புத்தளத்தில் இடம்பெற்றது.

புத்தளம் பிரதேசத்தில் வாழும் சகல இனங்களினதும் ஐக்கியத்திற்காகவும், சமாதானத்துக்காகவும் உழைத்த இத்தேரரின் இறுதிக்கிரியை நிகழ்வில் புத்தளத்தின் சகல இன மக்களுடன் அதிகமான மௌலவிமார்களும் கலந்து கொண்டனர். இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா, புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி லால், புத்தளம் பிரதேச சபைத் தலைவர் நிமல் பமுனு ஆராச்சி, முள்ளாள் வடமேல் மாகாண அமைச்சர் எம். எச். எம். நவவி, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், முஸ்லிம் பிரமுகர்கள் உட்பட அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காலமான தேரர் புத்தளத்தில் சர்வமத இயக்கங்களின் தலைமை பொறுப்பையும் ஏற்று செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Disqus Comments