Friday, February 27, 2015

நிறைவேற்று அதிகார ஒழிப்புக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச்செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய பேரவையுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளன.
இதன்போது, புதிய அரசியல் அமைப்பின் அடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்ய சுதந்திரக் கட்சியினர் இணக்கம் தெரிவிக்கவில்லை.
சுதந்திரக் கட்சியின் சார்பில் நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோடு ஜனாதிபதி ஆலோசகர் ஜயம்பதி விக்ரமரட்ன உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு சுதந்திரக் கட்சி ஆரம்பம் முதலே எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-டெய்லிசிலோன்.கொம்.
Disqus Comments