Saturday, February 28, 2015

அலரி மாளிகையின் பூச்சாடிகள் கம்பஹாவுக்கு தாவரவியல் பூங்காவிற்கு மாற்றம்

அலரி மாளிகையைச் சுற்றியுள்ள சுவரை அழகுபடுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு, கடந்த ஆட்சியாளர்களினால் இந்த பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்படுவதன் காரணத்தினாலேயே இவையனைத்தும் அகற்றபட்டதாக, பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்தார். அலரி மாளிகையிலிருந்து அகற்றப்பட்ட அனைத்து பூந்தொட்டிகளும் கம்பஹாவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் இவற்றை பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுவதாகவும் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் நன்மை கருதியே இந்த நடவடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Disqus Comments