Friday, February 27, 2015

தேர்தல் முறையை மாற்­றிய பின்­னரே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்-ராஜித சேனா­ரட்ன

நாட்டின் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்ட பின்­னரே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்­றது. காரணம் தேர்தல் முறையை மாற்­று­வ­தாக நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடி­யாது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.
தேர்தல் முறையை மாற்­றி­னால்தான் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. எனவே மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் திருத்தம் நிறை­வேற சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவு தேவை­யாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் எனது தனிப்­பட்ட கருத்­தா­னது தற்­போதை முறை மாற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தாகும். இதில் எந்த சிக்­கலும் இருக்க முடி­யாது. தேர்தல் முறையை மாற்­றினால் நான் சில வேளை எதிர்­வரும் தேர்­தலில் தோல்­வி­ய­டை­யலாம். ஆனால் இந்த முறை மாற­வேண்டும் என்­பதே முக்­கி­ய­மாகும்.
கேள்வி: அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன?
பதில்: நாட்டின் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்ட பின்­னரே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்­றது. காரணம் தேர்தல் முறையை மாற்­று­வ­தாக நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடி­யாது. தேர்தல் முறை மாற்­றத்தின் பின்­னரே தேர்தல் நடை­பெறும் .இதற்­கான நட­வ­டிக்­கை­கயை நாங்கள் எடுப்போம்.
கேள்வி: 19 ஆவ து திருத்தச் சட்டம் எப்­போது வரும்?
பதில்: மார்ச் மாதத்தில் வரும்.
கேள்வி: தேசிய அர­சாங்கம் அமைக்க தயாரா?
பதில்: கட்­டு­நா­யக்­கவில் இடம்­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­ல­மர்வில் தேசிய அர­சாங்கம் குறித்து ஆரா­ய­ப­பட்­டது. இறு­தியில் தேசிய அர­சாங்கம் அமைக்க சுதந்­திரக் கட்சி இணங்­கி­யது. இன்று ( நேற்று) சுதந்­திரக் கட்­சியின் மத­திய குழு கூட­வுள்­ளது. அந்தக் குழுவில் இறுதி முடிவு எடுக்­கப்­படும்.
கேள்வி: தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் வலு­வான எதிர்க்க்­கட்சி இல்­லா­து­போய்­வி­டுமே?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் விடு­தலை முன்­னணி இட­து­சாரி கட்­சிகள் என பல உள்­ள­னவே.
கேள்வி வலு­வான எதிர்க்­கட்சி?
பதில்: தேசிய அர­சா­ஙகம் நீண்­ட­கா­லத்­துக்கு நீடிக்­காது. பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் கூட இரண்டு வருடங்களே தேசிய அரசாங்கம் இருககும். அதன் பின்னர் தனித்தனியாக சென்றுவிடுவோம்.
கேள்வி: தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றனவா?
பதில்: சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் ஆராயப்படும்.
Disqus Comments