Tuesday, February 17, 2015

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தரமற்ற டீசல் திருப்பி அனுப்பப்பட்டது.

கொள்வனவு செய்யப்பட்ட தரம் குறைந்த முப்பதாயிரம் டெ்ரிக் டொன் டீசலைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிபொருள் துறை இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். சிங்கப்பூர் கம்பனி ஒன்றின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட தரம் குறை்த டீசலே இவ்வாறு நேற்று திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்ட டீசல் தரமற்றதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

Disqus Comments