Sunday, February 22, 2015

விமல் வீரவங்சவின் மனைவி கைது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷஸீ வீரவங்ச சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச பிரமுகர்களுக்கான கடவுச்சீட்டு ஒன்றினை முறையற்ற விதத்தில் செய்து கொண்ட குற்றத்திற்காகவே திருமதி ஷஸீ வீரவங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இவர் சுகயீனம் எனக் கூறி மாலபே பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Disqus Comments