நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும் என மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு விளங்கப்படுத்தும் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம் இன்று கரந்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது,
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்து போகப் போகிறது. இதனால் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெறும் நிலை உள்ளது. எனவே இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறாவிட்டால் அது அடுத்து 20 வருடங்களுக்கு எதிர்க்கட்சியிலேயே இருக்கும் நிலை ஏற்படும்.
இது ஒரு சூழ்ச்சியாகும். இந்தச் சூழ்ச்சிக்கு அகப்பட வேண்டாம் என நாம் கூட்டணியைக் கேட்டுக் கொள்கின்றோம். நாம் நடத்திய நுகோகொடை கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ வருவதற்கு இருக்கவுமில்லை. செய்தி ஒன்றை அனுப்ப தீர்மானித்திருக்கவுமில்லை. எனினும் அங்கு திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்த பின்னரே செய்தி ஒன்றினை அனுப்பி வைத்தார். மஹிந்தவோ, மக்களோ விரும்பினால் மட்டும் போதாது. கூட்டமைப்பின் தலைவர்கள் விரும்ப வேண்டும் என்றார்.
(மூலம் - சிங்கள ஏசியன் மிரர்.கொம் சிங்கள இணையம்)