Monday, February 23, 2015

தேசிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு  ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

இந்த செயலமர்வு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசே தலைமையில் கடந்த 21, 22 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு புல் மூன் ஹோட்டலில் நடைபெற்றது.

தேசிய அரசாங்கமொன்றுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த யோசனைகே சுதந்திரக்கட்சி ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அமைச்சுப் பதவிகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில்  பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Disqus Comments