தேசிய அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பங்கெடுப்பதென முடிவாகியுள்ள நிலையில் அமைச்சரவை விஸ்தரிப்பு இடம்பெறலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பங்கெடுப்பதென முடிவாகியுள்ள நிலையில் அமைச்சரவை விஸ்தரிப்பு இடம்பெறலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் செயலமர்வின் போது தேசிய அரசாங்கத்தில் தமது கட்சியும் இணைந்து கொள்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ள அதேவேளை இதனடிப்படையில் அமைச்சரவை விஸ்தரிப்பும் இடம்பெறலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல் முறையில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருவதால் தேர்தலும் தள்ளிப்போகக்கூறிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் மூலங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் பெரும்பாலும் மேலும் சில அமைச்சர், பிரதியமைச்சர் நியமனங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு சு.க ஒத்துழைக்கும் எனவும் 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான இணக்கமும் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
