விலைகளை குறைக்காது விற்பனை செய்துவரும் வர்த்தகர்கள் தொடர்பில் நுகர்வோரிடமிர்ந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளாக நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடளாவியரீதியில் உள்ள நுகர்வோரிடமிருந்து இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைப்பின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
பாண் விலை குறைக்கப்பட்ட போதிலும் நிர்ணயிக்கப்பட்டளவு நிறையிலும் குறைவாகவுள்ளமை தொடர்பிலும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன
வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணம் நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்கக்கூடிய வகையில் உரிய திட்டத்தை தயாரிக்க வேண்டும் என நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணத்திற்கு ஏற்ப பொருட்களின் விலையை குறைக்காத 300 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்யாத வர்த்தகர்களை கண்டறியும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.எம்.டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
