Monday, February 23, 2015

மஹிந்தவுக்கு நிமல் ஸ்ரீபால டீ சில்பா ஆப்பு - அடுத்த பிரதமராக முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடமிருந்து எதிர்க்கட்சித் தலைவா் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவுக்கு  அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புக்கள் பதில் இல்லாமல் தோல்வியில் முடிவதாக ஏசியன் மிர்ரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நிமல் மஹிந்த ராஜபக்ஷ அவா்களின் தொலை பேசி அழைப்புக்களை  வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாக அறியமுடிகின்றது. இருந்தாலும்  எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவா்கள் மீண்டும் உங்களுக்கு  அழைப்பார் என்று ஆறுதல் கூறியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுடனான நட்பு நிமலின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பதாக  தான் கருதுவதோடு இலங்கையின் அடுத்த பிரதமராக தான் வரவேண்டும் என்ற ஆசையில் நிமல் ஸ்ரீபால டி சில்வா இருப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவா்களின்  தேசிய அரசாங்கம் குறைந்தது இரண்டு வருடங்கள் நீடிக்கும் என ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் நிமலுக்கு நெருக்கமானவா்களிமிருந்து அறியக்கிடைக்கின்றது.

அத்துடன் இரண்டு வருடங்களின் அடுத்து பிரதமராக வருவதற்கு திடமான சந்தா்ப்பம் இதுவாகும் எனவும் மஹிந்த ராஜபக்ஷயின் மீள் அரசியல் பிரவேசம் தன்னுடைய எதிர்கால திட்டத்தை  குளியில் தள்ளிவிடும் என்பதாக  நிமல் நம்புகின்றார்.


டி சில்வா, எதிர்கட்சித் தலைவர் என்ற தனது வகிபாகத்தில், முன்னைநாள் ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றம் வரவேண்டுமென்ற பலரிடம் காணப்படும் பரபரப்பான உணர்வு இல்லாமல் இதுவரை நடுநிலையாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தது.

(மூலம் - ஆங்கில ஏசியன் மிரர்.கொம்  இணையம்)
Disqus Comments