Sunday, February 22, 2015

புத்தளம் தொகுதி மக்களுக்கு விஷேட நன்றிகள் - பிரதமர் ரணில்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிரிசேனாவின் வெற்றிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புத்தளம் தொகுதி மக்களுக்கும், புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம். என். எம். நஸ்மிக்கும் தனது விஷேட நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று மாலை வென்னப்புவ தும்மலதெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள த மெல் மண்டபத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இந்நாட்டில் இனவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். மதவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்காகவா நாம் இந்தளவு துயரப்பட்டோம்? எமது தொழில்களை இழந்தோம்? எமது வீடுகளை உடைத்துக் கொண்டோம்? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனேகமானோர் விஷேடமாக இளைஞாகள் நாம் கூறும் விடயங்களை விரும்புகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உருமய, முஸ்லிம் கட்சிகள் என எல்லோரும் இம்முறையினை விரும்புகிறார்கள். இன்று சத்தம் போடுபவர்களுக்குத் தனியாக வந்து தமது கட்சியில் வெல்ல முடியாது என்றும் பிரதமர் ரணில் இங்கு மேலும் தெரிவித்தார்.




Disqus Comments