Tuesday, February 17, 2015

கல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா நீதிமன்றக் கட்டிடம் திறந்து வைப்பு

கல்பிட்டியில் நிர்மானிக்கப்பட்ட  சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திற்கான நிரந்தரக் கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று காலை 11.00 மணிக்கு நடை பெற்றது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்தக் கட்டிடத்தைத் வைபவப ரீதியாக திறந்து வைத்தார்..

இத்திறப்பு விழாவில் முன்னாள் நீதி அமைச்சரும், தற்போதைய நகர அபிவிருத்தி நீர் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மின்சக்தி எரிபொருள் துறை இராஜாங்க அமைச்சருமான பாலித ரங்கே பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டி. சில்வா, நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதுவரை காலமும் தற்காலிகக் கட்டடிடங்களிலேயே கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இதனையடுத்தே இங்கு நிரந்தர நீதிமன்றக்கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னாள் நீதி அமைச்சரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.







Disqus Comments