நிட்டம்புவ - வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகில் இன்று (09) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சந்தேகநபரான 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
