Monday, March 9, 2015

பெண்களுக்கான சவால்! இரகசிய கமராக்கள்(HIDDEN CAMERAS) ! எச்சரிக்கைப் பதிவு!!!

தகவல் தொழில் நுட்பம் வளா்ந்துள்ள நிலையில் இன்றைய கால கட்டத்தில் பெண்களை குறிவைத்துள்ள அம்சம் தான் இரகசிய கெமராக்கள் (HIDDEN CAMERAS). எந்த அளவுக்கு இன்று தொழில் நுட்பம் வளா்ந்துள்ளதோ அந்த அளவிற்கு கலாச்சார சீா்கோடும்  பெருகி இருப்பதை அறிய முடிகின்றது.

இரசகிய கெமராக்களின் வகைகள்.




















(முக்கிய குறிப்பு இன்னும் பல வகையில் கெமராக்கள் இருக்கின்றன.)


கேமராக்களை மறைத்து வைத்து பெண்களின் அந்தரங்கங்களை கூறுபோடும் கயவா்களின் அட்டகாசம் தான் இன்றைய கால கட்ட பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால். நாம் அடிக்கடி பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் சினிமா நடிகைகளின் குளியல் காட்சிகள் கசிந்தன என்றெல்லாம் படித்திருப்பீா்கள். ஆனால் இனையத்தில் சென்று பார்த்தால் சினிமாப் பட நடிகைகள் என்று சொல்வதை விட ஒன்று அறியாத அப்பாவிப் பெண்கள், இல்லத்தரசிகள் போன்றவா்களின் அந்தரங்கக் காட்சிகள் அதிகமாக காணக் கிடைக்கின்றன. அத்தனை காட்சிகளும் அந்தப் பெண்களுக்கு தெரியாமல் இரசியமாக மறைத்து வைக்கபட்டிருக்கும் கெமராக்கள் மூலமாக எடுக்கப்பட்டவை. திட்டமிட்டு அடிக்கடி பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு வீடியோக்களாக எடுக்கப்படுபவை தான் அவைகள்.

கேமராக வைத்த மொலைல் போன்கள் பாவனைக்கு வந்த பின்னா் இப்படிக்பட்ட வீடியோக்கள் எடுக்கப்படுவது சா்வ சாதாரணமாகிவிட்டது. இவ்வாறு எடுக்கப்படும் வீடியோக்கள் குறிப்பிட்ட பெண்களை, அவா்களை குடும்பத்தை மிரட்டி பணம் பறித்தல் அல்லது ஆபாச இணையத்தளங்களுக்கு விற்றல் போன்ற வற்றுக்காக பயன்படுத்தப்படுவதை காணலாம்.

மேலும் அனைத்து பகுதிகளிலும் மறைத்து வைக்கக் கூடிய கெமராக்களை இலகுவில் கொள்வனவு செய்ய முடியும் என்ற அளவுக்கு சந்தையில் இப்படிப் பட்ட கெமராக்கள் மலிந்து கிடக்கின்றன.

ஏன் வீடியோ எடுக்கின்றார்கள். 

இப்படி எடுக்கப் படும் ஆபாச் வீடியோக்களுக்கு இணையத்தில் கிராக்கி அதிகம். எந்த ஒரு ஆபாச இணையத் தளமாக இருந்தால் இப்படி மறைத்து எடுக்கப்படும் வீடியோக்களுக்காக தனியான ஒரு பகுதியை ஒதுக்கிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி வீடியோக்கள் சிக்கும் போது அதிக விலை கொடுத்து வாங்கி அவற்றை இணையத்தில் பதிவேற்றி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது இன்றைய காலகட்டதில் மிகப் பெரிய பணதட முதலீட்டும் வழியாக மாறியிருக்கின்றது.

தாங்களாகவே சிக்கிக் VIDEOக்களில் சிக்கும் தம்பதியினா்
இன்னுமொரு முக்கியமான விடயம் தான் கணவன்மனைவிமார் குடும்பமாக இருக்கும் போது தமது அந்தரங்கங்களை வீடியோ எடுத்து அதனை பிறகு பார்த்து ரசிப்பதும் இன்னொரு கலாச்சார மாக மாறியிருக்கின்றது. நாங்கள் தானே பார்க்க எடுக்கின்றோம் என்று குடும்பமாக இருக்கும் போது மனைவிமார் வீடியோ எடுப்பதை தடுப்பதில்லை. நீங்கள் எடுக்கும் வீடியோவை பார்த்து விட்டு அழித்தாலும் அதனை மீட்டு எடுக்கக் கூடிய மென்பொருட்கள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. அந்த வகையில் எப்போதாவது உங்களது மொபைல்கள் பழுதாகி நீங்கள் திருத்துவதற்காக கொடுக்கும் போது அப்படிப்பட்ட அழிக்கப்பட்ட வீடியோக்களை மீட்டெக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மறைக்கப்பட்ட கெமராக்கள் வைக்கப்படும் இடங்கள்.
 v  கழிவறைகள்.
v  ஹோட்டல் அறைகள்
v  பேரூந்து நிலையங்கள்
v  இரயில் நிலையங்கள்
v  பெண்கள் உடை மாற்றும் (இடங்கள்).
v  வேலைத்தளங்கள்.

இன்னும் எம்மால் கற்பனை கூட பன்னிப் பார்க்க முடியாத இடங்களில் கூட இப்படிப் பட்ட வீடியோக்கள் எடுக்கப்பட்டு இணையத் தளங்களுக்கு விற்கப்படுவதை, ஆபார இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதைக் காணலாம்.


VIDEO CALLS + VIDEO CHATTINSஆல் படம் பிடிக்கப்படும் அந்தரங்கள்.
இன்னும் ஆபார புகைப் படங்கள், மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு அவை பரவுவதற்கு மிக முக்கியமாக இருக்கும் இன்னொரு வழிமுறையதான் இந்த VIDEO CALLS + VIDOE CHATTINS வசதிகள். இவற்றில் MESSEGERS, SKYPE, VIBER, WHATSAPP, LINE, TANGO, IMO, ROUNDS, WECHAT, மற்றும்  NIMBUZZ போன்ற போன்ற அனைத்தும் அடங்கும். இது போன்ற வசதிகளை பயன்படுத்தும் தம்பதிகள், காதலா்கள், இன்னும் பொழுது போக்கிகள் காமவேட்களை காரணமாக, ஆசை ஆட்கொள்வதன் விளைவாக  தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் அந்தரங்க படங்கள்., வீடியோக்கள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் போன்றவை எதிர்காலம் அவா்களுக்கிடையில் பிரச்சினைவரும் அவா்களைப் பழிவாங்க பயன்படுத்தப் படுவதையும் காணலாம்.

பிச்சினைக்கு என்ன தீா்வு

v  சுறுக்கமாக சொல்லதென்றால் உங்களது அந்தரங்கங்களை மொபைல்களில்  எடுக்காதீா்கள். அது உங்கள் கணவன்மார்களாக இருந்தாலும் எடுப்பதற்கு அனுதிக்காதீா்கள்.
v  சூப்பர்மார்க்கெட் இன்னும் நீங்கள் ஆடைகளை மாற்றாதீா்கள். எந்த நிலை வந்தாலும் சரி.
v  அனைத்து பொது இடங்ளிலும் பெண்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
v  இந்த விடயம் தொடா்பாக பெண்களுக்கு விளிப்புணா்சி ஏற்படுத்தப்படல் அவசியம்.
v  அரட்டை அடித்தலை தவிர்ந்து கொள்ளுதல். (குரல் + வீடியோ)

நாம் இருக்கும் இந்த இணைய யுகத்தைப்  பொறுத்த வரையில் எமது பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். வெள்ளம் வருமன் அணையைக் கட்டிக் கொள்வது மிக அவசியமாகும்.




Disqus Comments