தன்னால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வினாயகமூர்த்தி முரளீதரன் எனும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். தான் இன்னமும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகப் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தானும் போட்டியிட்டு வெற்றி பெறுவதோடு, அம்மாவட்டத்தில் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கொழும்பில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில் அவர் தெரிவித்தார்.
(நன்றி - லங்கா சீ நிவ்ஸ் சிங்கள இணையம்)