Tuesday, March 10, 2015

சீன ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபத்திய பெண் தீக்குளிப்பு

சீன ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீபத்திய பெண்ணொருவர் தீக்குளித்துள்ளார்.

நோர்சுக் என சுருக்கப்பெயரால் அழைக்கப்படும் மேற்படி 40 வயது மதிக்கத்தக்க பெண் விசுவான் மாகாணத்தில் அபா பிராந்தியத்திலுள்ள துரொட்ஸ்க் நகருக்கு அண்மையில் இவ்வாறு தீக்குளித்துள்ளார்.

சீன ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீபத்தியர்  ஒருவர் தீக்குளிப்பது இந்த வருடத்தில் இதுவே முதல் சம்பவமாகும்.

2008 ஆம் ஆண்டிலிருந்து தனக்குத்தானே தீ வைத்து தீக்குளித்த 137 ஆவது திபத்தியராக நோர்சக் விளங்குகிறார்.
Disqus Comments