(`Hisam PX) ஆர்ஜென்டீனாவின் வட மேற்குப் பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 8 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்த்தவர்கள் என்றும் 2 பேர் ஆர்ஜென்டீனா நாட்டின் விமானிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களில் மூன்று விளையாட்டு வீரர்களான:
1. Camille Muffat, வயது 25 (2012 லண்டன் ஒலிம்பிக், 400 மீடர் நீச்சல், தங்கப் பதக்கம்)
2. Alexis Vastine, வயது 28 (2008 பீஜிங் ஒலிம்பிக், குத்துச் சண்டை, welterweight பிரிவு, வெங்களப் பதக்கம்)
3. Florence Arthaud, வயது 57 (அத்லாந்திக் சமுத்திரத்தைத் தனியாள் படகில் கடக்கும் போட்டியில் வெற்றிபெற்றவர், 1990-ம் ஆண்டு)
ஆகியோர் அடங்குவதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
328 அடி உயரத்திலேயே இந்த இரண்டு ஹெலிகொப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தகது.
நன்றி: DailyCeylon
