-எம்.யூ.எம்.சனூன் | புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பச்சைக்காடு முந்தல் கிராமத்தில் வதியும் குறைந்த வருமானம் உடைய பொதுமக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் இந்த பொதிகளை வழங்கி வைத்தார்.
அண்மைக் காலத்தில் புத்தளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் வதியும் மக்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்கள் ஆட்சியில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.


