-யோ.வித்தியா ’
தொண்டையில் மாத்திரையொன்று சிக்கியதில் 3 வயது சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
சம்பவத்தில், கி.அருண் சிறுவனே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அச்சிறுவனுக்கு, அவனது தாயார் மாத்திரையொன்றைக் கொடுத்த போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அச்சிறுவனை அவனது பெற்றோர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே அச்சிறுவன் உயிரிழந்துள்ளான்.
பிரேத பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர் மயூரன், மாத்திரையொன்று தொண்டையில் சிக்கியதாலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.
