கிரீன் டீயில் 6 விதமான பாலிபீனால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கம். தேநீரில் பல வகை காணப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது க்ரீன் டீ, பிளாக் டீ ஆகியனவாகும். இவைகள் மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் மருந்தாகவும் உள்ளன.
கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. க்ரீன் டீ கேமிலியாசைனன்ஸிஸ் எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. க்ரீன் டீ.,யில் 6 விதமான பாலிபீனால்கள் உள்ளன.
க்ரீன் டீயில் அதிகமாக காணப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்கிறது. உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை சமச்சீராக பராமரிக்கிறது. கிரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட்சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது. கிரீன் டீயில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது.
