லுணுகல நகரிலுள்ள வெதுப்பகத்தில் (பேக்கரி) இளைஞன் ஒருவன் வாங்கிய பாண் இறாத்தலில் பீடி துண்டொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பீடி பாணுடன், வெதுப்பக உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லுணுகல பொது சுகாதார பரிசோதகர் ஹேமந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேக்கரி உரிமையாளர் மற்றும் பாண் கொள்வனவு செய்த இளைஞன் ஆகிய இருவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது,
என்றும் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
