Tuesday, March 10, 2015

அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இன்றைய லீக் ஆட்டத்தில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
260 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா (64) ஓட்டங்களுக்கும், தவான் 100 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய கோலி (44), ரஹானே (33) ஆகியோர் 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களைக் குவித்தனர்.
முன்னதாக, நாணயசுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக போர்ட்டர் பீல்டு, பால் ஸ்டிரிலிங் ஆகியோர் களமிறங்கினர்.
போர்ட்டர் பீல்டு 67 ஓட்டங்களுக்கும், பால் ஸ்டிரிலிங் 42 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால், அதை பின் வரிசையில் வந்த வீரர்கள் யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. நியல் ஓ பிரையன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
முடிவில் அயர்லாந்து அணி 49 ஓவர்களுக்குள் 259 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இந்தியாவிற்கு 260 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்களும், அஸ்வின் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
Disqus Comments