Saturday, March 21, 2015

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் APRIL 7ம் திகதி வெளியீடு

2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை,4279 நிலையங்களில் நடைபெற்றது.
கடந்த முறை சாதாரண தரப் பரீட்சைக்காக மூன்று இலட்சத்து 70 ஆயிரத்து 739 பாடசாலை பரீட்சார்த்திகளும், இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 481 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.
Disqus Comments