உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14 அணிகளுக்கு இடையிலான 11–வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது.
இன்று நடைபெறும் கடைசி சுற்று லீக் ஆட்டம் ஒன்றில் மேற்கிந்திய தீவுகள்–ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் நேப்பியரில் மோதின.
மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையிலே ஆட்டம் தொடங்கியது. போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 175 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் அதிகப்பட்சமாக நசீர் அஸிஸ் 60 ஓட்டங்களையும், ஜாவேத் 56 ஓட்டங்களையும் எடுத்தனர். 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் துடுப்பெடுத்தாடியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுமித் 15 ஓட்டங்களிலும், சார்லஸ் 55 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
சாமுவேல் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடத் தொடங்கிய ரூஸ்செல் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்திய தீவுகள் 30.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதியில் கார்டர் 50 ஓட்டங்களுடனும், ராம்டின் 33 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டிகளில் இருந்து வெளியேறியது.
