Sunday, March 15, 2015

மகிந்த தோல்வியடைய வேண்டும் என கடவுளிடம் விசேசமாக பிராத்தித்தேன் மோ்வின் சில்வா

 முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோ்தலில் தோல்வியடைய வேண்டும் என விசேட பிரார்த்தனைகளை விஷ்னு தெய்வத்திடம் வேண்டிக் கொண்டேன் என முன்னாள் அமைச்சா் மோ்வின் சில்வா  தெரிவித்துள்ளார்.

 அவா் சிங்கள ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஆரம்ப வருடம் மிகத் திறமையான ஆட்சி செய்த மகிந்த அதன் பின் நாட்டை சீரழிக்கும் விடயங்களிலேயே  ஆா்வத்தைக் காட்டினார். அத்தோடு அமைச்சா்களின் செயற்பாடுகள் பற்றிய விபரங்களையும்,  பந்தக்காரா்களின் பேச்சுக்களையும் கேட்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் திறமையாக சேவை செய்பவா்களின் வளா்ச்சிக்கும் தடைகளை ஏற்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
Disqus Comments