வாகன இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவொன்றை அடுத்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
குறித்த மனுவை மார்ச் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பெப்ரவரி 10ம் திகதி விடுத்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ´ஹைபிரிட்´ கார்களின் விலை உயர்வடைந்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
