சிவனொளிபாத மலையில் ஏறிய, 55 வயதான சிங்கபூர் பிரஜையொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிங்கபூர் பிரஜைகள் அடங்கிய குழுவுடன் சிவனொளிபாதமலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறியபோதே இந்திகட்டுபான பகுதியில் வைத்தே அவர் மரணடைந்துள்ளார்.
இதுதொடர்பில் சிங்கபூர் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.