Tuesday, March 17, 2015

மதுபோதையில் சொந்த தாயை கத்தியால் குத்திய மகன் கைது

எம்.எஸ்.முஸப்பிர் | மதுபோதையில் தனது தாயை  கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மகன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

 வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை முகாமிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான இஸ்மாயில்புரம் பிரதேசத்தைச் சேர்ந்த மெடில்டா பெர்னாண்டோ (வயது 50) என்பவர்  புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 மதுபோதையில் வீட்டுக்கு வந்த இந்தச் சந்தேக நபர் தனது மனைவியுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், இவர்களை சமாதானப்படுத்துவதற்கு சந்தேக நபரின் தாய் முயன்றபோதே,  அவர் கத்திக்குத்துக்கு உள்ளானார். சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு  வண்ணாத்திவில்லு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விசாரணைகளையும்  மேற்கொண்டுவருகின்றனர். 
Disqus Comments