Monday, March 2, 2015

திருடர்களா அல்லது இதன் பின்னணியில் ஏதும் சூழ்சிகள் உள்ளனவா?

புத்தளம்மற்றும் கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள் இரவு நேரங்களில் திருடர்கள் நுழைந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுதிவயல் மற்றும் கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறை, ஆலங்குடா போன்ற பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருவதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இது நிஜமாகவே திருடர்கள்தானா அல்லது இதன் பின்னணியில் ஏதும் நாசகார சக்திகளின் சூழ்ச்சிகள் உள்ளனவா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்ச நிலையில் உள்ளனர். எனவே உடனடியாக இவ்விடயம் தொடர்பில் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். உடன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், குறித்த பிரதேசங்களில் பொலிஸ் குழுக்களை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகவும் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதேச இளைஞர்கள் மிக அவதானத்துடன் நிதானத்துடனும் செயற்படு வேண்டும் எனவும், மாகாண சபை உறுப்பினர் நியாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Disqus Comments