Tuesday, March 3, 2015

ட்விட்டருக்கு மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள ISIS

அமெரிக்க நிறுவனமான ட்விட்டர் குறும்பதிவு தளத்திற்கு  ISIS   மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அதன் இணை நிறுவனர் ஜேக் டோர்ஸி மற்றும் ஊழியர்களுக்கு ட்வீட் வழியாக ஞாயிற்றுக்கிழமை  ISIS .  மிரட்டல் விடுத்ததாக ட்விட்டர் நிறுவனம் என்.பி.சி. செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளது.
“எங்கள் இயக்கத்தின் மீது நீங்கள் நடத்திவரும் சைபர் போர் உங்களுக்கே திரும்பும். எங்களது புனிதப் போர் உங்களோடு அல்ல என்று நாங்கள் முதலிலேயே கூறினோம். ஆனால் நீங்கள் அதனை ஏற்று நடக்கவில்லை. தொடர்ந்து எங்களுக்கு இடையூறு செய்து வருகிறீர்கள். இதனால் எங்களை முடக்க முடியாது. நாங்கள் திரும்பி வந்து கொண்டே இருப்போம்” என்று ட்விட்டரைக் குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் குறித்த உண்மைத்தன்மையை ட்விட்டர் குழுவினர் விசாரித்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டோர்ஸியின் படத்தை பதிவு செய்து விடுக்கப்பட்டிருக்கும் இந்த மிரட்டல் குறித்து நேரடி புகாரை அந்த நிறுவனம் சைபர் பிரிவில் பதிவு செய்துள்ளது.
ஆனால், ஊழியர்கள் அனைவருக்கும் ட்விட்டர் பக்கங்களை நிர்வாகம் செய்வது குறித்த சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் ட்விட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் அவர்களது நிறுவன வாசலில் ஓநாய் தாக்குதல் நடத்த தற்கொலைப்படை வீரர் ஒருவர் காத்துக்கொண்டு இருக்கிறார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும் என்ற எச்சரிக்கையை  ஐ.எஸ். தீவிரவாதிகள் இதற்கு முன்னதாக விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Disqus Comments