Tuesday, May 26, 2015

சுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் தொலைக்காட்சி அறிமுகம்



எல்.ஜி. நிறுவனம் ஒரு மில்லி மீட்டர் தடிப்பில் புதிய தொலைக்காட்சி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொலைக்காட்சி சுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரியாவில் நடந்த வணிக நிகழ்வு ஒன்றில் இந்த புதிய தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
O.L.E.D என்ற புதிய தொழில்நுட்பத்தைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சியின் மொத்த எடை வெறும் 1.9 கிலோ கிராம் தான்.
இப்போது இருக்கும் தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த மின்சாரமே இதற்கு போதுமானது.
தேவை ஏற்படும் போது ஸ்டிக்கரை உறித்து எடுத்துக்கொள்ள முடியும். 77-இன்ச் தொலைக்காட்சியின் விலை 15.75 இலட்சம் ரூபா.
தற்போது சந்தையில் இருக்கும் எல்.ஜி.யின் மெல்லிய வகை தொலைக்காட்சி 4.4 மீல்லி மீட்டர் தடிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments