Friday, May 29, 2015

பா்மாவில் முஸ்லிம்களின் படுகொலையை எதிர்த்து இன்று புத்தளத்தில் ஆா்ப்பாட்டம்.

பா்மாவில் முஸ்லிம்கள் மது மிலேச்சத் தனமக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலையை வன்மையாக கண்டித்தும், இலங்கை அரசும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளா் போன்ற அதிகாரம் மிக்கவா்கள் இந்த விடயத்தில் தலையிட்டு  அவற்றை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடா்ந்து கண்டனப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

இதில் சா்வ மதத் தலைவா்கள், அரசியல் பிரமுகங்கள், சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள் மற்றும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனா். குறிப்பாக பௌத்த மதப் பிக்குமார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Disqus Comments