Saturday, May 30, 2015

புத்தளம் அக்கரைப்பற்று மக்களுடனான PPAF யின் ஒன்றுகூடல் மதுரங்குளியில்.

(Puttalamonline.com) 26 வருடங்கள் இழக்கப்பட்ட புத்தளம் தொகுதிக்கான பாராளமன்ற பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் PPAF யின் முயற்சியில் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக புத்தளம் அக்கரைப்பற்று மக்களுடன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஓன்று கூடல் வெள்ளிகிழமை (29-05-2015) மதுரங்குளி Dream Hall யில் நடைப்பெற்றது.

பிற்பகல் 4:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டம் 6:15 மணிவரை தொடர்ந்தது. PPAF யின் இடைக்கால மத்திய சபையின் புத்தளம்-அக்கரைப்பற்று உறுப்பினர் சகோதரர் சட்டத்தரணி நுஹுமான் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இவ்வொன்று கூடலின்போது பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன
26 வருடகால புத்தளம் மாவட்ட அரசியலில் எல்லா மட்டங்களிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஸ்த்திரமற்ற அரசியல் கொள்கை, சமூகத்தின் கவனயீனம், அதனால் இழந்தவைகள், ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய அரசியல் கலாச்சாரம், என்பன மிக பிரதானமாக பேசப்பட்டன.
இவற்றிலிருந்து மீள்வதற்கான PPAF யின் அரசியல் பார்வை, கொள்கை அதனை அடைந்து கொள்வதற்கான PPAF கடந்த ஒன்றரை வருடகாலமாக முன்னெடுக்கும் செயற்பாடுகள், அடைவுகள், தடைகள் என்பன தெளிவு படுத்தப்பட்டன.
மக்கள் சந்திப்பின் முக்கிய நிகழ்வாக கருத்து பரிமாறல் மற்றும் கேள்வி பதில் நிகழ்வும் மிகச்சிறப்பாக இடப்பெற்றன. இதன்போது சமகால புத்தளம் அரசியல் மீதுள்ள நம்பிக்கையற்ற தன்மை மக்களிடையே சிறு சல சலப்பை ஏற்படுத்தியது.
எதிவரும் பாராளமன்ற தேர்தலில் பாராளமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ள PPAF முன்வைக்கும் பொது கூட்டணி திட்டமும் அதனை நோக்கிய செயற்பாடுகளும். தெளிவு படுத்தப்பட்டன.
இழக்கப்பட்ட பாராளமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ள PPAF யின் முயற்சி வரவேற்கதக்கதும். அதனூடாக பலமான ஒரு மக்கள் சக்தியை உருவாக்கி.  இழக்கப்பட்ட பாராளமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளவோம். என அப்பிரதேச மக்கள் உறுதியளித்தனர்.




Disqus Comments