Tuesday, June 2, 2015

நரம்பு தளர்ச்சி நோய்: 6 குழந்தைகளை கருணை கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர்


புதுடெல்லி ஆக்ராவை சேர்ந்தவர் மொகமத் நசீர் (வயது 42) அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையிலும் உணவை உண்ண முடியாத நிலையிலும் பலவீனமாக உள்ளனர்.குழந்தைகள் 6 வயது முதல் 18 வயது வரை உள்ளனர். நசீர் 6 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு  கடிதம் எழுதி உள்ளார். மேலும் குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவி செய்ய பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

6 குழந்தைகளுக்கு தந்தையான நசீர் கூறியதாவது:-

நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கபட்டு எனது குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். எனது வருமானத்தால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனது குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாகதான் பிறந்தார்கள். 2 வருடம் அனைத்து குழ்ந்தைகளை போலும்  சாதரணமாகத்தான் இருந்தார்கள்.4 அல்லது 5வயதில் அவர்களுக்கு உடலநிலையில் சரி இல்லாமல் போனது அதில் இருந்து அவர்கள் மிகவும் பலவீனமானவர்களாக மாறினார்கள் அவர்களால் எழுந்து நடக்க கூட முடியவில்லை.நான் குழந்தைகளை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.அல்லது பிரதமர் மோடி மருத்துவ உதவி செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகளின் தாயார் தமசும் (வயது 36) கூறியதாவது:- 

எங்களுக்கு பொருளாதார நிலை இல்லை. அதனால் தான் நாங்கள் கருணை கொலை செய்ய அனுமதி கேட்கிறோம். அவர்களால் தங்கள் உணவை எடுத்து தங்களால் உண்ண முடியவில்லை. எங்களால் குடும்பத்தை கவனிக்கவே பெரிய பாடாக உள்ளது இதில் அவர்களின்  சிகிச்சைக்கும் எங்களால் செலவிட முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து டாகடர் உபத்யாய் கூறும் போது இது ஒரு குணபடுத்தமுடியாத நோயாகும்.ஆனால் குறிப்பிட்ட காலம் மருத்துகள் உதவியுடன் கட்டுப்படுத்த முடியும்.என கூறினார்.

நசீர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களை சென்று பார்த்து உள்ளார் ஆனால் வறுமை காரணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.
Disqus Comments