Tuesday, June 2, 2015

நுகா்வோர் அதிகார சபை மீது சிங்கள ஊடகங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அமைச்சரின் பதில்.

கடந்தவாரம்  நுகவோர் விவகார அதிகார சபையின் உள்ளக ஆதாரங்கள் மற்றும் ஊழியர்களினை  மேற்கோள் காட்டி சில சிங்களம் மொழி பத்திரிகைகள் பல தவறான  செய்தி அறிக்கைகளை வெளியிட்டன. செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கூற்றுக்கு இணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் வழங்கப்பட்ட உத்தியோக ப10ர்வ அறிக்கை

1.        கடந்தவாரம்  நுகவோர் விவகார அதிகார சபையின் உள்ளக ஆதாரங்கள் மற்றும் ஊழியர்களினை  மேற்கோள் காட்டி சில சிங்களம் மொழி பத்திரிகைகள் பல தவறான  செய்தி அறிக்கைகளை வெளியிட்டனர்
2.  எனது கீழ் இயங்கும்  நுகவோர் விவகார அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்யப்ப்டட எட்டு வாகனங்களில் நான்கு வாகனங்கள் எனது சொந்த தேவைக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது முதலாவது குற்றச்சாட்டு
3.        இது ஒரு தவறான குற்றச்சாட்டு. நுகவோர் விவகார அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்யப்ப்டட எந்தவொரு வாகனங்களையும் நான் எனது சொந்ந தேவைக்காக பயன்படுத்தவும் இல்லை பறித்துக்கொள்ளவும் இல்லை என்று நான் இன்று திட்டவட்டமாகவும்  தெளிவாகவும் கூறவிரும்புகின்றேன்
4.   நுகவோர் விவகார அதிகார சபைக்கு சொந்தமான வாகன விவகாரம் தொடர்பில் விசாரனையினை மேற்கொள்வதற்கு  குழுவொன்றை  நியமிக்கவுள்ளேன்.
5.        அத்துடன் சந்தை நடவடிக்கையின் போது மருந்துகளின் விலை நிர்ணய சு10த்திரத்தின் போது 10 சதவீத கமிஷனை மருந்து நிறுவனங்களில் இருந்த பெற்றுக்கொள்ளும் படி நான் நுகவோர் விவகார அதிகார சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியதாக நுகவோர் விவகார அதிகார சபையின் உள்ளக ஆதாரங்கள் மற்றும் ஊழியர்களினை  மேற்கோள் காட்டி செய்தி அறிக்கைகளில் மேலும் சுட்டிக்காட்ப்பட்டிருந்தன.
6.        இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கின்றேன். இது முற்றிலும் பிழையானது.  நான் எந்தவொரு பரிந்துரைகளையும் செய்யவில்லை;  
7.        தவறான அறிக்கையின் விளைவாக நுகவோர் விவகார அதிகார சபையின் தலைவரை நீக்க நான் திட்டமிட்டுள்ளேன் எனறும் அவ் செய்தி அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
8.   நாம் ஒரு புதிய தலைவரை நியமிக்க திட்டமிட்டிருக்கின்றோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்
9.        எனினும்ää நான் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூறவிரும்புவது என்னவென்றால் எனக்கு அவர் உடன்படவில்லை என்ற  உள்நோக்கத்தோடு தற்போதைய தலைவர் நீக்குவதற்கான திட்டமிட்டம் என்னிடம் இல்லை   
10.     உண்மையில்ää   உள்நோக்கத்துடன் அவரை நீக்க என்னிடம் திட்டம் ஒன்றும் இல்லை இதுவும் ஒரு தவறான அறிக்கை ஆகும்.
11.     பத்து ஆண்டுகளாக  பதவியில் உள்ள தற்போதைய தலைவர் முந்தைய நிர்வாகத்தின் கீழ் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர.; புதிய நிர்வாகம் ஜனவரி 2015 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்ääஇப்பதவி நீக்கப்படுவது என்பது தெளிவாக உள்ளது.
12.     உண்மையில் இது தான் யதாhத்தம.; தற்போது பதவியில் இருக்கும்   தலைவர் ஒருபோதும்; தனது ராஜினாமா ஒப்பந்தத்தலிருந்து வாபஸ் பெறவில்லை. இன்னும் மூன்று மாதங்களுக்கு பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு எம்மிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கிணங்க நாம் அதனை நீடித்துக்கொடுத்தோம்
13.     ஒப்பந்தற்கு இணங்க பதவி நீடிப்பு மூன்று மாத காலம் வழங்கப்பட்டது. அதற்கு  பின்னர் பதவி நீடிப்பு வழங்;கப்படமாட்டாது.   ஓய்வு பெறுவது உடன்பாடாகும்.
14.     கூடுதலான வழங்கப்ட்ட இந்த மூன்று மாத  கருனை காலம் ஏற்கனவே முடிந்தது.
15.     ஆகையால்ää நாங்கள் இப்போது நுகவோர் விவகார அதிகார சபைக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்க திட்டமிட்டுள்ளோம்
16.     இலங்கை நுகர்வோருக்கு தனது சேவையை வழங்கிய வெளியேறும் தலைவருக்கு நுகவோர் விவகார அதிகார சபை ஊடாக எங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்


Disqus Comments