ஹம்பாந்தோட்டை, கொன்னொருவ பகுதியில் பயிர் செய்கைக்காக
பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி நான்கு காட்டு யானைகள்
உயிரிழந்துள்ளன.
சட்டவிரோதமான முறையில் செய்கையை மேற்கொண்டுள்ள ஒருவரால்
பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி இந்த யானைகள்
உயிரிழந்துள்ளதாக வனப்பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எச்.டி. ரத்னாயக்க
குறிப்பிடுகின்றார்.
ஒரு குட்டி யானை உட்பட மூன்று யானைகளும், மாடு ஒன்றும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளன.
சட்டவிரோதமாக மின்சார வேலியை பொருத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனப்பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம்
மேலும் தெரிவித்தார்.