மத்தேகொட, சதுன்புர பிரசேத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய
ஆயுதத்தியால் தாக்கி கொலை செய்து தானும் விசம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
இன்று (24) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை, தற்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரது முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அப்பெண் தனது பிள்ளையை அறநெறிப்
பாடசாலையில் கொண்டு சென்று விட்டதன் பின்னர் வீடு திரும்பிய
சந்தர்ப்பத்திலேயே அவரது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்து தானும் தற்கொலை
செய்து கொண்டவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் உயிரிழந்த பெண் 40 வயதானவர்
எனவும் தெரியவந்துள்ளது