மது அருந்துவதற்காக தனது போலீஸ் தொப்பியை 100 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார் ஒரு பொலிஸ் அதிகாரி.
சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உள்ள
ஒரு டாஸ்மாக் கடையில் ஒரு பொலிஸ் அதிகாரி சீருடையுடன் வந்து மது அருந்தியுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் வெளியே வந்த அவர், ரயில்வே நிலையம் முன்பு
நின்றிருந்த ஒருவரிடம் தொப்பியை அடமானமாக வைத்துக் கொண்டு 100 பணம்
கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
அந்த நபர், வேறு வழியின்றி தொப்பியை
பெற்றுக் கொண்டு 100 ரூபாய் கொடுத்துள்ளார். பணம் பெற்ற மறுநிமிடமே, அந்த
ஏட்டு மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
இதனிடையே, தொப்பியுடன் நின்ற நபர்
பயத்தில் அந்த தொப்பியை ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் அருகே போட்டு
விட்டு சென்று விட்டார். அதை மீட்டு சேலம் டவுன் ரயில்வே நிலையத்தில்
சைக்கிள் ஸ்டாண்ட் வைத்திருப்பவரிடம் சிலர் கொடுத்துள்ளனர்.