கொள்ளை கும்பல் ஒன்று அங்கிருந்த ஆவணங்களையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தியுள்ளதுடன் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டில் புகுந்த இனந்தெரியாத
இச்சம்பவம் கெகுணகொல்ல பிரதேசத்திலுள்ள தம்பிட்டி முஸ்லிம் கிராமத்தில்
கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி இரவு நடுநிசியில் நிகழ்ந்துள்ளது.
ஹொரம்பாவை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் யு.எல்.அமீரின் இல்லமே இவ்வாறு
கொள்ளையிடப்பட்டுள்ளது. ஜன்னலை உடைத்து வீட்டினுள் புகுந்த திருடர்கள்
தூக்க நாசினியைத் தெளித்து வீட்டில் உள்ளோரை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்திய
பின்னரே இக்கைங்கரியத்தை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய
வந்துள்ளது.
பாடசாலை சம்பந்தமான ஆவணங்களை வெளியே எடுத்து தீ வைத்துள்ளதுடன் மோட்டார்
சைக்கிளையும் கடத்திச் சென்று பல மைல் தூரங்களுக்கு அப்பால் வீதியோரம்
ஒன்றில் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து
சாம்பராகியுள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபா பணத்தையும்
இவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்தலத்துக்கு வந்த கட்டுப்பொத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
எம்.பத்மகுமார தலைமையிலான பொலிஸ் குழு விசாரணை மேற்கொண்டதுடன்
சீ.ஐ.டி.யினரின் உதவியையும் நாடியுள்ளது.