Sunday, November 24, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இடமளிக்கும் வரை ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இடமளிக்கும் வரையிலும் நான் இறங்க மாட்டேன் என்று கூறி ஜனாதிபதி மாளிகையிலுள்ள மரத்திலேறி ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னர் சிரேஷ்ட உதவியாளர் ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருக்கின்ற மரத்திலேயே  ஏறி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வட மத்திய மாகாண சபையின் கீழ்  சாரதியாக சேவையாற்றிய அவர் ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னர் 2007 ஆம் ஆண்டு சேவையிலிருந்து நீக்கியதாகவும் தனக்கு ஏற்பட்ட அசாதாரணத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமையை அடுத்தே அவர் மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்திலுள்ள மாளிகைக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Disqus Comments