20 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதிய தேர்தல் முறைமை குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
125 உறுப்பினர்கள் கலப்பு முறைமை அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
அத்துடன், 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழேயே நடைபெறும் என்று வெளிவிவகாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பீ பெரெரா தெரிவித்துள்ளார்.