Tuesday, June 9, 2015

ஞாபக மறதியை அதிகரிக்கும் சில தீயப் பழக்கவழக்கங்கள்!! -

நமது உடல்நலத்திற்கு ஏதேனும் குறைபாடு ஏற்படுகிறது எனில், அதற்கு 99% நாம் தான் காரணம். மீதமுள்ள 1% தான், மற்றவர் மேல் அக்கறையற்ற இந்த சமூகம் காரணம். ஆனால், முன்னிலையில் இருக்கும் அந்த 99% நமது உடலின் மீது நாமே எடுத்துக்கொள்ளாத அக்கறையின்மை.
இரசாயனங்களின் கலப்பு இருக்கிறது என்று தெரிந்தும் நாம் சில வெளிநாட்டு தயாரிப்பு குளிர் பானங்களை தவிர்ப்பதாய் இல்லை. உடல் நலத்திற்கு நல்லது என்று தெரிந்தும் வேக வைத்த காய்கறிகளை நாம் உண்பதாய் இல்லை. இவ்வாறான செயல்களினால் தான் நமது உடலும், “உன் பேச்ச நான் என்ன ***டேஷ்** கேக்குறது..” என்று அடம்பிடிக்கிறது.
தலைமுடிக் கூட நாம் அழுத்தி சீவினால் தான் அடங்குமே தவிர, அதுவாக அடங்காது. அது போல, நம் உடலின் மீது நாம் அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டால் அது சாதரணாமாக இருக்காது. நமது சில தீயப் பழக்கவழக்கத்தினால் தான் நமக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது…, அந்த தீயப் பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று இனிப் பார்க்கலாம்…
முக்காடுப் போட்டு தூங்குவது
முக்காடுப் போட்டு தூங்குவதனால் கூட ஞாபகமறதி ஏற்படுமாம். இவ்வாறு தூங்கும் போது, கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது, இது நமது மூளையைப் பாதிக்கிறது. இதனால் தான் முக்காடுப் போட்டு தூங்கக் கூடாது என்று நமது முன்னோர் கூறியுள்ளனர்.

கொழுப்பு நிறைந்த உணவுகள்
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் ஓர் ஆய்வில், நமது ஞாபகமறதி அதிகரிப்பிற்கு 25% காரணமாக இருப்பது கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது தான் என்று கூறப்பட்டுள்ளது.

உடல் உழைப்பின்மை
தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்து வருவதும் கூட ஞாபகமறதியை அதிகரிக்கிறதாம். உடல் உழைப்பின்மை தான் இதற்கு காரணமாக இருக்கிறது.

உடல்நலக் குறைவின் போது வேலை செய்தல்
உடல்நலம் குன்றி இருக்கும் போது, தொடர்ந்து வேலை செய்து வந்தாலும் ஞாபகமறதி ஏற்படும். ஓய்வின்றி அதிகமாக உழைப்பதனால் ஏற்படும் தாக்கத்தினால் தான் இது ஏற்படுகிறது.

மருந்துகளின் காரணமாக
உடல்நலக் குறைவின் காரணமாக நாம் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளின் தாக்கத்தினாலும் ஞாபகமறதி ஏற்படலாம்.

தூக்கமின்மை
சரியான அளவு தூக்கம் இல்லாவிட்டாலும் கூட ஞாபகமறதி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மது மற்றும் புகை
பிறகு, எப்போதும் போல, புகை மற்றும் மது.. இவை இரண்டினால் உயிரே போகும் என்று கூறினாலே, நாம் விடுவதாய் இல்லை. இனி, ஞாபகமறதி ஏற்படும் என்றால் மட்டும் உடனே விட்டுவிடுவோமா என்ன? எல்லாம் அவரவர் உடல்நலத்தின் மீது, அவரவர் எடுத்துக்கொள்ளும் அக்கரையில் தான் இருக்கிறது.


Disqus Comments