Friday, June 5, 2015

வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட வியாபார வரி குறைக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளுக்கான விசேட வியாபார வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி உருளைக்கிழங்கிற்கான விசேட வியாபார வரி 50 ரூபாவிலிருந்து
30 ரூபா வரையிலும் மற்றும்  வெங்காயத்திற்கான விசேட வியாபார வரி 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Disqus Comments