Saturday, June 6, 2015

புத்தளம் மாவட்டம் உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பாக - மாகாண சபை உறுப்பினா் நியாஸ் அவா்கள்.

புதிதாக சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான 'எல்லை நிர்ணயம்'' தொடர்பாக நாம் புத்தளம் மாவட்ட மக்களோடு பல சுற்று பேச்சுவார்த்தை நடாத்தினோம்.


இதன் பிற்பாடு அந்த சட்ட திருத்தத்தில் பல முறைகேடுகள் இருப்பதையும் , மக்கள் தொகைக்கேற்ப எல்லைகள் பிரிக்கப்படவில்லை என்பதையும் கண்டோம்...

இதனை நாம் முறையாக இது தொடர்பான அமைச்சர்கள் ( Minister Karu Jayasooriya) , அதிகாரிகளுக்கு எடுத்து கூறினோம்...

இருந்த போதும் இதுவரைக்கும் நமக்கு சாதகமான ஒரு விடை கிடைக்கவில்லை...

ஆதலால் இப்பொழுது இது சம்பந்தமாய் அரச உயர் மட்டத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் , மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் ''கல்பிட்டி தொடக்கம் புத்தளம் கச்சேரி'' வரைக்கும் மக்களையும் இணைத்துக்கொண்டு ஒரு யாத்திரையை தொடர உத்தேசித்துள்ளோம்.

யாத்திரையின் இறுதி நிகழ்வாக அரசாங்க அதிபரிடம் ஒரு மகஜரை கையளிக்கவும் எண்ணி உள்ளோம் ...

இத்திட்டத்தை நோன்பு காலம் ஆரம்பம் ஆவதற்கு முன்பு செய்வதற்கு எண்ணி உள்ளோம்...

இதற்கு உங்கள் பங்களிப்பும் தேவைப்படுவதால் ஆயத்த நிலையில் இருக்கும் படி வேண்டி கொள்கிறோம்...

காலம், நேரம் பற்றி எமது உத்தியோகபூர்வ அறிவித்தல் பின்னர் வெளியிடப்படும், அதுவரை மக்களுக்கு இது பற்றிய விடயத்தை தெளிவு படுத்துங்கள்...
நன்றி,...

எஸ்.எச்.எம்.நியாஸ் 
(வட மேல் மாகாண சபை உறுப்பினர் ,
முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீட உறுப்பினர்)
Disqus Comments