Friday, June 5, 2015

மொரீஷியஸின் முதல் பெண் அதிபரானார் அமீனா குரிப் பாகிம்

மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொரீஷியஸின் அதிபராக இருந்த கைலாஷ் புர்யாக் அண்மையில் பதவி விலகியதையடுத்து புதிய அதிபராக உயிரியல் விஞ்ஞானி அமீனா குரிப் பாகிமினை பிரதமர் சர் அனிரூத் ஜெகனாத் அறிவித்தார்.

அவரது நியமனம் தொடர்பாக மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் நேற்று (04) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அமீனா குரிப் பாகிமினுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அவரது நியமனத்திற்கு நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்திருப்பதால் இன்று அவர் முறைப்படி பதவியேற்கவுள்ளார்.
Disqus Comments