Wednesday, June 3, 2015

சாதாரண மக்களைப் போல் காவலா்கள் இன்றி பாதணிக்கடைக்குச் சொன்ற ஜனாதிபதி

முன்னா் இந்த நாட்டை ஆட்சி செய்தவாகள் மிக ஆடம்பர சொகுசு  வாழ்க்கையை 
வாழ்ந்தார்கள் என்பது யாவரும் அறிந்தது.  அவா்கள் மக்கள் பணத்தை சோ்த்து செலவு செய்தார்கள். அவா்களின்  பிள்ளைகள் அணியும் பாதணிகளின் பெறுமதி இலட்சத்தையும் கடந்தது.

அவ்வாறானவா்கள் பயன்படுத்தி இடுப்புப் பட்டியின் விலை கூட  இலட்சத்தையும் தாண்டியது. இப்படியிருக்கும் போது பொலன்நறுவையை பிறப்பிடமாக கொண்ட பல்லேவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்ற  சாதாரண ஒருவரை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதியாக நியமித்ததது இந்நாட்டு மக்களினால்  ஏற்படுத்தப்பட்ட ஒரு புரட்சியாகும். 

இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் இலங்கை அதிபரான  மைத்திரிபால சிறிசேனா தனக்கு அவசியமான பாதணிகளை  கொள்வனவு செய்வதற்காக தான் செல்லும் பயணத்தின் இடையில்  தெஹிவளையில் இருந்த சாதாரண பாதணி கடை ஒன்றிற்கு சென்றுள்ளார்.  இதன்போது சாதாரண ஒருவா் அணியும் பாதணி இரண்டினையும்  பெற்றுக் கொள்டுள்ளார். 

விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி அந்த  நிலையத்தில் உள்ள கதிரையொன்றினில் அமர்ந்து  பாதணிகளை தெரிவு செய்யும் போது எடுக்கப்பட்ட  புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இப்புகைப் படம் கடையில் பணிபுரிபவா்களால் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments