Wednesday, June 24, 2015

ONLINE SHOPPING பக்கங்களை அறிமுகப்பத்தியது TWITTER நிறுவனம்!

ட்விட்டர் நிறுவனம், Products and Places பக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் இதன்மூலம் பொருட்களை வாங்கலாம். இதில் brand பெயர், தயாரிப்பு, பொருட்கள் பற்றிய குறிப்பு மட்டுமின்றி சிலவற்றில் ட்விட்டர் மூலமாகவே பொருட்களை order செய்வதற்கு ‘Buy’ பட்டனும் உள்ளது.
இந்த விபரங்களை மற்றவர்களுக்கு ட்வீட் செய்யவும் முடியும்.
சில ஒன்லைன் வர்த்தக நிறுவன இணையத்தள இணைப்புகளும் இதில் சேர்க்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை முறையில் உள்ள இந்த வசதி விரைவில் உலகம் முழுவதும் அறிமுகமாகும் என தெரிகிறது.
ஒன்லைன் வர்த்தக வளர்ச்சியில் சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கியமானது.
கூகுள் நிறுவனம் தனது தேடுதல் பக்கத்திலேயே பொருட்களை order செய்து வாங்குவதற்கான ‘Buy’ பட்டனை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments