Friday, June 12, 2015

Twitter நிறைவேற்று அதிகாரி இராஜினாமா

உலகில் பிரபல்யம்வாய்ந்த சமூக வலைத்தளமான Twitterரின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய டிக் கொஸ்டோலோ, அந்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அவரது, இராஜினாமாவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு பதிலாக Twitter  இணை வடிவமைப்பாளரான பேக் டொர்சே தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 1ஆம் திகதி முதல் கடமையாற்றுவார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டுவிட்டர் சமூகவலைத்தளத்தின்  வளர்ச்சி மேம்பாடு தொடர்பில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தமையை அடுத்து ஏற்பட்ட மன அழுத்தத்தின் பின்னணியிலேயே அவர் இராஜினாமா செய்துகொண்டதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும், டுவிட்டர் குழு தொடர்பில் தான் பெருமைகொள்வதாக டிக் கொஸ்டோலோ, இராஜினாமா செய்துகொண்டதன் பின்னர் தெரிவித்துள்ளார். 
டிக் கொஸ்டோலோ, பதவியை இராஜினாமா செய்துகொண்டதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு தகுதியானவரை நியமிப்பது தொடர்பில் பணிப்பாளர் சபை, குழுவொன்றை நியமித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டிக் கொஸ்டோலோ பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Disqus Comments